வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை
பண்ருட்டி திருவதிகையில் உள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நேற்று நடந்தது.
பண்ருட்டி,
பண்ருட்டி திருவதிகையில் உள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி மாலையில் மூலவரான வீரட்டானேஸ்வரர் பெரியநாயகி அம்பாளுக்கும், நந்தீஸ்வரருக்கும் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு மாலை 6 மணியளவில் பிரதோஷ நாயகர் வாகனத்தில் மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல் புவனகிரி அருகே எறும்பூர் கிராமத்தில் உள்ள கல்யாண சுந்தர சமேத கடம்பவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும், சிவலிங்கத்துக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாரானை காண்பிக்கப்பட்டது. முன்னதாக கோவில் வளாகத்தில் பஞ்சலோக ஐந்து தலை நாகம் சிலை புதிதாக வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story