விஷம் குடித்து பெண் தற்கொலை
கருவேப்பிலங்குறிச்சி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
விருத்தாசலம்
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள ஏ.வல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 35). கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சரஸ்வதி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரஸ்வதி பாிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது சரஸ்வதியின் உறவினர்கள், அவரது சாவுக்கு கணவர் வீரப்பன் தான் காரணம், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை சரஸ்வதியின் உடலை வாங்கமாட்டோம் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற உறவினா்கள் சரஸ்வதியின் உடலை வாங்கிக்கொண்டு இறுதி சடங்கு செய்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story