மான்கறி விற்ற ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கைது


மான்கறி விற்ற ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 2:20 AM IST (Updated: 29 April 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

மான்கறி விற்ற ஒர்க்‌ஷாப் உரிமையாளர் கைது ெசய்யப்பட்டார். அவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்:-
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் ஒரு ஆட்டோ ஒர்க்‌ஷாப்பில் மான்கறி விற்பனை செய்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனப்பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் குமார் தலைமையிலான குழுவினர் சென்று, ஒர்க்‌ஷாப் உரிமையாளரான அய்யந்திருமாளிகை பகுதியை சேர்ந்த ஹரிகரன் (வயது 39) என்பவர் மான்கறி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை வனப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவருடைய கூட்டாளியான கொல்லப்பட்டியை சேர்ந்த லோகநாதன் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்த 10 கிலோ மான்கறி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஹரிகரனுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஹரிகரனுக்கு, லோகநாதன்தான் மான்கறி கொடுத்து வந்துள்ளார். எனவே லோகநாதனை கைது செய்த பிறகுதான் மான்கறி எப்படி கிடைத்தது. எந்த வனபகுதியில் மான் வேட்டையாடப்பட்டது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story