பணம், செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது


பணம், செல்போன் திருடிய  சிறுவன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 2:22 AM IST (Updated: 29 April 2022 2:22 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணம், செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாழப்பாடி:-
வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையத்தில் பேளூர் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கடந்த 11-ந் தேதி இரவு 12 மணி அளவில் எரிபொருள் விற்பனை செய்த ரூ.40 ஆயிரத்தை பையில் வைத்துக் கொண்டு தூங்கியுள்ளனர். அதிகாலையில் ஊழியர்கள் கண்விழித்து பார்த்தபோது பணப்பையும், ஒரு செல்போனையும் காணவில்லை. இது குறித்து வாழப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணம், செல்போனை திருடியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்ட  சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த செம்மட்டையன் என்கிற நாகராஜ் (வயது 35) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Next Story