தரைமட்ட தொட்டிக்குள் தவறி விழுந்த வாலிபர் சாவு
நெல்லை அருகே தரைமட்ட தொட்டிக்குள் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குளம்:
நெல்லை அபிஷேகப்பட்டி அருகே வடுகப்பட்டியில் தனியார் காகித ஆலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல்குமார் திவாரி (24) காகித கூழ் அரைக்கும் எந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். கடந்த 25-ந்தேதி பணிக்கு சென்ற இவர் திடீரென்று மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் ஊழியர்கள், நண்பர்கள் தேடினர்.
இந்த நிலையில் நேற்று காகித ஆலையில் காகித கூழ் சேகரிக்கும் சுமார் 10 அடி ஆழ தரைமட்ட தொட்டிக்குள் ராகுல்குமார் திவாரி உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. உடனே நெல்லை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, ராகுல்குமார் திவாரியின் உடலை மீட்டனர். அவரது உடலை சீதபற்பநல்லூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராகுல்குமார் திவாரி காகித கூழ் சேகரிக்கும் தரைமட்ட தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
Related Tags :
Next Story