ஈரோடு வழியாக கோடை கால சுற்றுலா ரெயில்
ஈரோடு வழியாக கோடை கால சுற்றுலா ரெயில் இயக்கப்படுகிறது.
ஈரோடு
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மே மாதம் 23-ந் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுகிறது. ஈரோட்டில் இந்த ரெயில் நின்று செல்லும். 12 நாட்கள் கொண்ட இந்த ரெயில் சுற்றுலாவில் கோவா, சர்தார் வல்லபாய் படேல் சிலை, ஐதராபாத், மைசூரு, அவுரங்கபாத், அஜந்தா குகை, பம்பாய் மாநகரம், ஹம்பி ஆகிய நகரங்களை சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதுபோல் திருப்பதி மற்றும் காளஹஸ்தி சிறப்பு பக்தி தரிசன ரெயிலும் ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது.
இந்த ரெயில்கள் மற்றும் பயண செலவு குறித்த விவரங்களை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக கோவை பகுதி அலுவலகத்தை 82879 31965, 90031 40655 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Related Tags :
Next Story