தென்காசியில் ரூ.1.16 லட்சம் போலி பீடிகள் பறிமுதல்


தென்காசியில் ரூ.1.16 லட்சம் போலி பீடிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 April 2022 2:54 AM IST (Updated: 29 April 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் ரூ.1.16 லட்சம் போலி பீடிகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தென்காசி:
தென்காசி கீழப்புலியூர் பகுதியில் பிரபல தனியார் பீடி நிறுவனத்தின் பெயரில் போலி லேபிள்களை தயாரித்து பீடி மூட்டைகளில் ஒட்டி பதுக்கி வைத்திருப்பதாக தென்காசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜா மற்றும் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தனியார் நிறுவனத்தின் பெயர் கொண்ட லேபிள்களை போலியாக ஒட்டி பீடி மூட்டைகளை பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சிவராமன் (வயது 46), சங்கரன் (46) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடிகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் என கூறப்படுகிறது.

Next Story