கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
பனவடலிசத்திரம்:
சங்கரன்கோவில் தாலுகா ஜமீன் இலந்தைக்குளத்தை சேர்ந்த வேலுக்கோனார் மனைவி செல்லத்தாய் (வயது 65). இவர் அங்குள்ள கிணற்றில் தண்ணீர் குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாா்.
இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசுக்கும், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கிணற்றில் இறங்கி செல்லத்தாய் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story