கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூல்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணியிட மாற்றம்


கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூல்: சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 29 April 2022 2:59 AM IST (Updated: 29 April 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வசூல் சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ஈரோடு
பெருந்துறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கிக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. அதில் ஒரு போலீஸ்காரர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பெயரை குறிப்பிட்டு, பெருந்துறை பணிக்கம்பாளையத்தில் கஞ்சா வியாபாரி வீட்டுக்குச்சென்று அவரிடம் பணத்தை மட்டும் பறிமுதல் செய்து வியாபாரி மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் அவரை தப்பவிட்டனர் என்று இருந்தது.
அதேபோல் அடுத்தடுத்த ஆடியோக்களில் பெருந்துறை சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஊர்க்காவல் படை போலீஸ் ஒருவர், கஞ்சா வியாபாரிகளிடம் எவ்வளவு மாமுல் வாங்குகின்றனர் என்பது குறித்த விவரங்கள் தொடர்பாக பேசும் உரையாடல்களும் வெளியாகின. இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் விசாரணை நடத்தி, பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கொடுமுடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்தார். அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக போலீஸ்காரர் ராஜீவ்காந்தி என்பவரை மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டதாக மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story