தென்காசி நகரசபை கூட்டம்


தென்காசி நகரசபை கூட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 3:06 AM IST (Updated: 29 April 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி நகரசபை கூட்டம் அதன் தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி:
தென்காசி நகரசபை கூட்டம் நேற்று மாலை அதன் தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, என்ஜினீயர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம் 28 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தென்காசி நகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இந்த பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், வாறுகால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று கவுன்சிலர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

தென்காசி சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார் மற்றும் ரத வீதிகளில் வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுமதி பெற்று அதனை அதற்கு பயன்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் மொத்தம் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story