கோபி அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது


கோபி அருகே  சரக்கு வேனில் கடத்தப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 29 April 2022 3:37 AM IST (Updated: 29 April 2022 3:37 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், டிரைவரையும் கைது செய்தனர்.

கடத்தூர்
கோபி அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், டிரைவரையும் கைது செய்தனர். 
ரகசிய தகவல்
கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிப்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பழனி கவுண்டம்பாளையத்தில் அரிசி மூட்டையுடன் நின்றுக்கொண்டிருந்த சரக்கு வேனை போலீசார் பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த சரக்கு வேனை உடனே சோதனையிட்டனர். 
ரேஷன் அரிசி பறிமுதல்
சோதனையின்போது அந்த சரக்கு வேனில் 3½ டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டனர். இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். சரக்கு வேனை ஓட்டி வந்த ஒட்டர்கரட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரசாந்த் (வயது 24) என்பவரையும் பிடித்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பிரசாந்தை உணவு பொருள் கடத்தல்  தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘பழனி கவுண்டன்பாளையத்தில் இருந்து ரேஷன் அரிசி நம்பியூா் அருகே உள்ள குருமந்தூர் பகுதிக்கு கடத்தப்பட்டது,’ தெரியவந்தது. தொடர்ந்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story