உண்டியல்கள் மூலம் ரூ.1½ கோடி காணிக்கை வசூல்


உண்டியல்கள் மூலம் ரூ.1½ கோடி காணிக்கை வசூல்
x
தினத்தந்தி 29 April 2022 4:25 AM IST (Updated: 29 April 2022 4:25 AM IST)
t-max-icont-min-icon

உண்டியல்கள் மூலம் ரூ.1½ கோடி காணிக்கை வசூலானது.

சமயபுரம்:
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள், கோவில் நிர்வாகம் சார்பாக மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் இரண்டாவது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் முன்னிலையில் 19 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில் காணிக்கையாக ரூ.1 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரத்து 725-ம், 3 கிலோ 295 கிராம் தங்கமும், 5 கிலோ 201 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 80- ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story