கஞ்சா விற்ற 7 பேர் கைது
கஞ்சா விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:
தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஒரு மாதமாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம், பாலக்கரை பகுதிகளில் அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ், அம்பேத்கர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்றதாக ஸ்ரீரங்கம் வசந்த நகரை சேர்ந்த கேசவராஜன்(வயது 24), விஜய்(22), ஸ்ரீரங்கம் கன்னியப்பன் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன்(61), கரூர் சமத்துவபுரத்தை சேர்ந்த நாகராஜ்(23) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்றதாக சூர்யா (19) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரம் மதிப்பிலான 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காந்தி மார்க்கெட் போலீஸ் எல்லையில் வரகனேரி பெரியார் நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக எடத்தெருவை சேர்ந்த வைத்தன் என்ற சுதாகர்(42), செங்குளம் காலனியை சேர்ந்த ஜெகன்(30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.22,500 மதிப்பிலான 2¼ கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story