திரு.வி.க. மேம்பாலம் அருகே அடையாறு ஆற்றில் மிதந்து வந்த ஆண் உடல் - கொலையா?


திரு.வி.க. மேம்பாலம் அருகே அடையாறு ஆற்றில் மிதந்து வந்த ஆண் உடல் - கொலையா?
x
தினத்தந்தி 29 April 2022 2:21 PM IST (Updated: 29 April 2022 2:21 PM IST)
t-max-icont-min-icon

திரு.வி.க. மேம்பாலம் அருகே அடையாறு ஆற்றில் மிதந்து வந்த ஆண் உடலை மீட்டு கொலையா? தற்கொலை என விசாரித்து வருகின்றனர்.

சென்னை, 

சென்னை திரு.வி.க. மேம்பாலம் அருகே அடையாறு ஆற்றில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் உடல் ஒன்று அழுகிய நிலையில் மிதந்து வந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த பட்டினம்பாக்கம் போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஆற்றில் மிதந்த ஆண் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஆற்றில் பிணமாக மிதந்தவர், சென்னை ஆரியபுரம் காமராசர் சாலை, சண்முகபுரத்தை சேர்ந்த முத்தையா (வயது 46) என்பது தெரியவந்தது.

முத்தையா அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு உடலை ஆற்றில் வீசினார்களா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story