போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு வெகுமதி வழங்கி பாராட்டு


போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு வெகுமதி வழங்கி பாராட்டு
x
தினத்தந்தி 29 April 2022 4:23 PM IST (Updated: 29 April 2022 4:23 PM IST)
t-max-icont-min-icon

க.விலக்கு போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தேனி:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா தேனியில் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று தேனிக்கு வந்தார். பின்னர் அவர் தேனியில் விழா பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். இந்நிலையில் இன்று  காலை ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு போலீஸ் நிலையத்துக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீரென சென்று ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் தூய்மை, குடிநீர் வசதி போன்றவற்றை பார்வையிட்டார். பின்னர், ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? புகார் அளிக்க வரும் மக்களுக்கு போதிய இருக்கைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்தை சிறப்பாக பராமரித்து வருவதாக அவர் போலீசாரை பாராட்டினார். மேலும், போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், நிலைய எழுத்தர்கள் செல்வம், ஆனந்தவேல் முருகன் ஆகியோரை பாராட்டி அவர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கினார்.

Next Story