சிறுமியை மானபங்கம் செய்த காய்கறி வியாபாரி கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 29 April 2022 4:59 PM IST (Updated: 29 April 2022 4:59 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை மானபங்கம் செய்த காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.

மும்பை, 
மும்பை தாதர் ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று 13 வயது சிறுமி தனது தாத்தாவுடன் பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தாள். அப்போது 32 வயது வாலிபர்  ஒருவர் சிறுமியின் அருகே அமர்ந்தார். திடீரென சிறுமியின் உடலில் கை வைத்து மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டாள். அக்கம் பக்கத்தில் இருந்த மற்ற பயணிகள் வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 
 இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மும்பை வந்ததாகவும், நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்து வருவதாக தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story