இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீணாக நேரத்தை கழிக்கக்கூடாது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீணாக நேரத்தை கழிக்கக்கூடாது, என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.
திருப்பத்தூர்
இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீணாக நேரத்தை கழிக்கக்கூடாது, என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.
100 இளைஞர்களுக்கு புத்தகம்
திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களில் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு பெறுவது குறித்து வழிகாட்டும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பாக காவலர்கள் மற்றும் இளைஞர்கள் நல்லுறவு என்னும் தலைப்பில் காவலர்கள் மற்றும் இளைஞர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கு அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் 100 இளைஞர்களுக்கு போட்டி தேர்வு புத்தகங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வழங்கி இளைஞர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
வீணாக நேரத்தைக் கழிக்காமல்
இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீணாக நேரத்தைக் கழிக்காமல் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாகப் பயன்படுத்தி போட்டித்தேர்வுக்கு தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். கல்வி தான் ஒருவரை சிறந்த மனிதராக மாற்றும். விடாமுயற்சியும் கடின உழைப்புமே வெற்றிக்கான பாதை என்பதை உணர வேண்டும்.
இப்பகுதி இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும். உங்களுக்கு உதவுவதற்கு காவல்துறை அப்போது தாயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story