ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்


ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 29 April 2022 5:40 PM IST (Updated: 29 April 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சிக்குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் மற்றும் தீர்மானங்களை ஊராட்சிமன்ற கண்காணிப்பாளர் ரமேஷ் வாசித்தார்.

கூட்டத்தில், வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு, கழிவுநீர் கால்வாய், தார், சிமெண்டு சாலை, கான்கிரீட் நடைபாதை அமைத்தல் உள்பட ரூ.1 கோடியே 59 லட்சத்து 67 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்வது, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் கொரோனா நிதியுதவி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை என்று முக்கிய திட்டங்களை அறிவித்து உடனுக்குடன் செயல்படுத்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில், வேலூர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story