மாணவர்கள் மனதை சிதறவிடாமல் கவனத்துடன் படிக்க வேண்டும்
மாணவர்கள் மனதை சிதறவிடாமல் கவனத்துடன் படிக்க வேண்டும் கலெக்டர் அறிவுரை
திருவண்ணாமலை
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு சேர்க்கை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த மாதிரி பள்ளியில் 80 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டம் கிராமங்கள் நிறைந்த மாவட்டமாகும். மாதிரி பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் அனைவரும் தனி கவனம் செலுத்தி பார்த்து கொள்வார்கள்.
நீங்கள் உங்கள் ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு நன்றாக படிக்க வேண்டும். 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
உயரிய பணிகளுக்கான கல்வியை பெற இதுவே அடித்தளமாகும். இங்கிருந்து கற்றல் என்னும் பயிற்சியினை எடுத்துக்கொண்டால் தான் தாங்கள் விரும்பும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற இயலும். உங்களுடைய மனதை சிதறவிடாமல் கவனத்துடன் படிக்க வேண்டும்.
பெற்றோர்கள் உங்களின் வீட்டு பிரச்சினைகளை குறித்து குழந்தைகளிடம் அதிகம் பேசாதீர்கள். அவர்கள் படிப்பதற்கு உதவியாக இருங்கள் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story