குடியாத்தம் நெல்லூர்பேட்டை தேர் திருவிழாவை 6 மணிக்குள் முடிக்க வேண்டும்
குடியாத்தம் நெல்லூர்பேட்டை கோவில் தேர் திருவிழாவை மாலை 6 மணிக்குள் முடிக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தம் நெல்லூர்பேட்டை கோவில் தேர் திருவிழாவை மாலை 6 மணிக்குள் முடிக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் வருகிற 11-ந் தேதியும், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேர் திருவிழா 14-ந் தேதியும், சிரசு ஊர்வலம் 15-ந்் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து துறை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்ஜெயன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, நகரமன்ற துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு வரவேற்றார்.
மாலை 6 மணிக்குள்
கூட்டத்தில் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறும் பகுதியில் மின்சாரம் தடை செய்ய வேண்டும், தேர் செல்லும் சாலைகளை சீர் செய்யவேண்டும், தேர் செல்லும் சாலைகளில் உள்ள மரக் கிளைகளைகளை அகற்ற வேண்டும். மேலும் பாதுகாப்பு வசதி, குடிநீர், சுகாதார வசதிகளை செய்துதர வேண்டும். தேரோட்டம் மாலை 6 மணிக்குள் நிலையை அடைய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
தேரை பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பின்னரே தேரோட்டம் நடைபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வெளிநடப்பு
அதேபோன்று இ-டெண்டர் முறை கெங்கையம்மன் கோவில் திருவிழாவுக்கு மட்டும் கொண்டு வரப்படுவதால் மற்ற கோவில்களுக்கும் இ-டெண்டர் முறையை அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டால் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்பதாக கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் தொடர்ந்து அதிகாரிகள் திருவிழா பாதுகாப்பு குறித்து செய்யப்படும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story