ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயம்
தூசி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயம்
தூசி
திருவண்ணாமலை மாவட்டம் ெவம்பாக்கம் தாலுகா வயலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் 12 பெண்கள் சிப்காட் தொழிற்சாலை ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
அவர்கள் இன்று காலை 8 மணி அளவில் வழக்கம்போல ஆட்டோவில் வேலைக்கு புறப்பட்டனர்.
ஆட்டோவை சோதியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் புருஷோத்தமன் ஓட்டிச் சென்றார்.
தூசி அருகே பாவூர் சோதியம்பாக்கம் சாலையில் சென்றபோது எதிரே கல்குவாரியில் ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி, ஆட்டோ மீது உரசுவது போல் வந்துள்ளது.
இதனால் ஆட்டோ டிரைவர் ஆட்டோவை திருப்பி உள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ அங்குள்ள கோழிப்பண்ணையில் மோதி கவிழ்ந்தது.
இதில் டிரைவர் புருஷோத்தமன் மற்றும் 12 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தூசி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story