வேலூரில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


வேலூரில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 April 2022 7:09 PM IST (Updated: 29 April 2022 7:09 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யவும், அந்த கடைகளின் மீது அபராதம் விதிக்கும்படி மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி, சுகாதார ஆய்வாளர் ரவி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மண்டித்தெருவில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

 அப்போது அந்த தெருவோரம் பிளாஸ்டிக் மூட்டைகளில் 300 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

அதைத்தொடர்ந்து ஜெயராம் செட்டி தெருவில் அதிரடி சோதனை செய்யப்பட்டது. அப்போது அங்குள்ள குடோனில் ஏராளமான பிளாஸ்டிக் மூட்டைகளில் 1¾ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பை, தெர்மாக்கோல் தட்டுகள் உள்ளிட்டவை காணப்பட்டது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் குடோனில் பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்த நபர்கள், குடோன் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story