பாலியல் தொழிலாளியை கொன்ற வங்கி ஊழியருக்கு ஆயுள் தண்டனை
பாலியல் பெண் தொழிலாளியை கொன்ற வங்கி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
பாலியல் பெண் தொழிலாளியை கொன்ற வங்கி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
தகராறு
மும்பை காமாட்டிபுரா பகுதியில் பாலியல் தொழிலாளியாக இருந்தவர் ரபிசா கான். இவரை வங்கி ஊழியர் ஒருவர் அடிக்கடி சந்தித்து செல்வது வழக்கம். இதனால் ரபிசா கானுடன் வெகுநாட்களாக நெருங்கிய உறவு வைத்திருந்தார். இதற்கிடையில் ரபிசா கான் முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருந்ததால் அடிக்கடி செல்போனில் பேசி வந்து உள்ளார்.
இது பற்றி அறிந்த வங்கி ஊழியருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அடிக்கடி சண்டை போட்டு தகராறு செய்து வந்தார்.
பெண் கொலை
கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி ரபிசா கான் செல்போனில் முன்னாள் காதலனுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வங்கி ஊழியர் ஆத்திரமடைந்தார். அவரின் தலைமுடியை பிடித்து அறைக்கு உள்ளே இழுத்து சென்றார். தான் கொண்டு வந்திருந்த கத்தியால் கழுத்தில் சராமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார்.
இதனால் அங்கிருந்த மற்ற பெண்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரபிசா கான் உயிரிழந்தார்.
ஆயுள் தண்டனை
இது குறித்து நாக்பாடா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த வங்கி ஊழியரை கைது செய்தனர். மேலும் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் வங்கி ஊழியர் மீதான ஆதாரம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து வங்கி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story