கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கூடம்


கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கூடம்
x
தினத்தந்தி 29 April 2022 7:32 PM IST (Updated: 29 April 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே 5 ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே 5 ஆண்டுகளாக கோவில் வளாகத்தில் அரசு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
கூத்தாநல்லூர் அருகே உள்ள மேல்கொண்டாழியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அந்த பகுதியில் உள்ள கிராமப்புற பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் நாளடைவில் பழுதடைந்தது. மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தன. கஜா புயலின் போது பழுதடைந்த பள்ளி கட்டிடம்  இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. 
கோவில் வளாகத்தில் பள்ளிக்கூடம்
இதனால் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தில் மாணவர்களை வைத்து பாடம் நடத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சம் அடைந்தனர். இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த தொடங்கினர்.  இன்று வரை மாரியம்மன் கோவில் வளாகத்தில் தான் தொடக்கப்பள்ளி நடைபெற்று வருகிறது. 
புதிய பள்ளி கட்டிடம் 
பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்றிய பிறகும் அங்கு புதிதாக பள்ளி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை. கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரத்தில் மாணவர்களை வைத்து பாடம் நடத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கோவில் வளாகத்தில் 5 ஆண்டுகளாக மாணவர்களை வைத்து செயல்படும் பள்ளிக்கூடத்திற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று   பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--


Next Story