உரிய அனுமதி பெறாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் சமய திருவிழா தேரோட்டத்தை உரிய அனுமதி பெறாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் சமய திருவிழா தேரோட்டத்தை உரிய அனுமதி பெறாமல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது:-
உறுதித்தன்மை சான்றுகள்
திருவாரூர் மாவட்டத்தில் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் சமய திருவிழாக்கள் தேரோட்டம், சப்பரம் மற்றும் பல்லக்கு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த
கோவில் நிர்வாகம், வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட துறை அனுமதி மற்றும் உறுதித்தன்மை சான்றுகள் பெற வேண்டும்.
கடும் நடவடிக்்கை
இந்த சான்றுகளுடன் முறையாக போலீஸ்துறை அனுமதி பெற்று நடத்த வேண்டும். எனவே சமய திருவிழாக்கள் தேரோட்டம், சப்பரம் மற்றும் பல்லக்கு போன்ற நிகழ்ச்சிகளை போலீஸ்துறை உரிய அனுமதி பெறாமல் நடத்தினாலோ அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்தாலோ சம்பந்தப்பட்ட விழாக்குழுவினர் மற்றும் பொறுப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story