கோத்தகிரி பேரூராட்சியில் நடைபாதையில் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை அகற்ற வேண்டும்
கோத்தகிரி பேரூராட்சியில் நடைபாதையில் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை அகற்ற வேண்டும்
கோத்தகிரி
கோத்தகிரி அரசு கருவூலத்திற்கு அருகே குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு செல்ல கோத்தகிரி பேரூராட்சி சார்பில் கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை இப்பகுதி குடியிருப்புவாசிகள் மட்டுமின்றி, காவலர் குடியிருப்பு, அரசு குடியிருப்புக்கள், அரசுப்பள்ளிக்கு செல்வோர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதி குடியிருப்புவாசிகள் சிலர் நடைபாதையைத் தடுத்து யாரும் பயன்படுத்தாத வகையில் இரும்பு நுழைவு வாயில் அமைத்து தடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோத்தகிரி தாசில்தார் காயத்ரியை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், பேரூராட்சிக்கு சொந்தமான நடைபாதையைத் தடுத்து சிலர் நுழைவு வாயில் அமைந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் நீண்ட தொலைவிற்கு நடந்து செல்ல வேண்டி உள்ளதால் நடைபாதை ஆக்கிரமிப்பு கேட்டை அகற்ற வேண்டும்.
மேலும் பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து நில அளவை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story