அய்யலூரில் களைகட்டிய ஆட்டுச்சந்தை
ரம்ஜான் பண்டிகையையொட்டி அய்யலூரில் ஆட்டுச்சந்தை களைகட்டியது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இங்கு வியாழக்கிழமை தோறும் ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்குவதற்காக திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், விவசாயிகளும் அதிக அளவில் வருகின்றனர்.

இந்தநிலையில் வருகிற 3-ந்தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் அய்யலூரில் நடந்த ஆட்டுச்சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் சந்தையில் குவிந்தனர்.
அப்போது ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.350 முதல் ரூ.420 வரையிலும், 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு ரூ.6,500 முதல் ரூ.7,500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளாடுகளை காட்டிலும் செம்மறி ஆடுகளை வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகள் விற்றுத்தீர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story