அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கப்பரை திருவிழா
ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கப்பரை திருவிழா நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கப்பரை திருவிழா நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கப்பரை திருவிழா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் வளர்ச்சிக்குழு தலைவர் மாதவன், செயலாளர் வீரமணி மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story