ஆபத்தான மின்கம்பம் சீரமைப்பு


ஆபத்தான மின்கம்பம் சீரமைப்பு
x
தினத்தந்தி 29 April 2022 9:14 PM IST (Updated: 29 April 2022 9:14 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பொரவச்சேரி ஊராட்சி குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது. மேலும் தாழ்வாக சென்ற மின்கம்பிகளும் சரி செய்யப்பட்டன.

சிக்கல்:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக  பொரவச்சேரி ஊராட்சி குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் சீரமைக்கப்பட்டது. மேலும் தாழ்வாக சென்ற மின்கம்பிகளும் சரி செய்யப்பட்டன.
ஆபத்தான மின்கம்பம்
பொரவச்சேரி ஊராட்சி, குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் சிக்கல்-பெருங்கடம்பனூர் இடையே செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. 
குற்றம்பொருத்தானிருப்பு மேலத்தெரு பகுதியில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டு வந்தது. மின்கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகளும் தாழ்வாக சென்றன. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சீரமைப்பு
 இதுதொடர்பாக செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் கடந்த 27-ந்தேதி வெளிவந்தது. இதன் எதிரொலியாக மின்வாரிய உயர் அதிகாரிகள்  சாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த  மின்கம்பத்தை சீரமைத்தனர். மேலும் தாழ்வாக சென்ற மின்கம்பிகளை சரி செய்தனர்.
இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நன்றி தெரிவித்தனர்.

Next Story