முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
புதூரில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈத்தாமொழி:
புதூரில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈத்தாமொழியை அடுத்த புதூரை சேர்ந்தவர் திரவியம் நாடார் (வயது75) தொழிலாளி. இவருக்கு சரஸ்வதி (68) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். திரவியம் நாடார் சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் திரவியம் நாடார் வீட்டின் வெளியே கழிவறை சுவரில் உள்ள இரும்பு கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த ஈத்தாமொழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story