செல்போன்கள் திருடிய 3 பேர் கைது
செல்போன்கள் திருடிய 3 பேர் கைது
திருப்பூர்,
ரெயில்களில் செல்போன் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் தனிப்படை அமைத்து திருப்பூர் ரெயில்வே போலீசார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். போத்தனூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ, திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் அப்புசாமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர், ரெயில்வே பாதுகாப்பு படையினர் துணையுடன் ரெயில் நிலைத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செருக்கனூரை சேர்ந்த ரஜினி (22), திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்குப்பத்தை சேர்ந்த இளவரசன் (19), ஒடிசா மாநிலம் போகரி பகுதியை சேர்ந்த ஜெகந்திர மாலிக் (28) ஆகிய 3 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை பயணிகளிடம் திருடியது தெரியவந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story