காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திட்டச்சேரி:
தமிழ்நாடு அரசு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் ஒன்றிய கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் பணியாளர்களுக்கு சமமாக சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி, முன்னாள் ஒன்றிய தலைவர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீராசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story