தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 29 April 2022 10:05 PM IST (Updated: 29 April 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளிக்கு 40 ஆண்டு சிறை

திருப்பூர், 
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த தொழிலாளியான ஜாகீர் ஹூசைன் (வயது 52) என்பவர் திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடந்த 8-12-2015 அன்று கடத்திச்சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜாகீர் ஹூசைனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. ஜாகீர் ஹூசைனுக்கு 6 பிரிவின் கீழ் மொத்தம் 40 ஆண்டு சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சுகந்தி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த வடக்கு போலீசார் மற்றும் வடக்கு மகளிர் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.

Next Story