அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்
அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற வேண்டும். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
கூட்டங்களில் மாவட்ட அளவிலான அலுவலர்களை பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story