குறுவை நெல் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம்
விதைகளின் முளைப்புத்திறனை அறிந்து குறுவை நெல் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார்.
வெளிப்பாளையம்:
விதைகளின் முளைப்புத்திறனை அறிந்து குறுவை நெல் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார்.
விதை பரிசோதனை
விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில் மூன்று விதமான விதைமாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. விவசாயிகள், தனியார் விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் இருப்பில் உள்ள வேளாண் துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நெல் ரகங்களான ஆடுதுறை 36, ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடுதுறை 53, கோ.51, அம்பை 16 உள்ளிட்ட குறுகிய கால ரக விதைகளின் முளைப்புதிறனை பரிசோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும்.
அதிக மகசூல்
இந்த ரகங்களின் விதை 150 கிராம் மாதிரி எடுத்து ஒரு மாதிரிக்கு கட்டணமாக ரூ.80 செலுத்தி பெயர், முகவரி, பயிர் விவரங்களுடன் 15 காளியம்மன் கோவில் தெரு வெளிப்பாளையம் நாகை என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தோ அல்லது நேரிலோ கொடுத்து முளைப்புத்திறனை அறிந்து கொள்ளலாம்.
விவசாயிகள் முளைப்புத்திறனை அறிந்து குறுவை நெல் சாகுபடியில் ஈடுபட்டால் அதிக மகசூல் பெறலாம். இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story