திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2.33 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2.33 கோடி
x
தினத்தந்தி 29 April 2022 10:08 PM IST (Updated: 29 April 2022 10:08 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.2.33 கோடி கிடைத்தது.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதந்தோறும் இருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மாதத்தில் முதல் முறையாக கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்டது. 2-வது முறையாக நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், உதவி ஆணையர்கள் ரத்தினவேல் பாண்டியன் (நாகர்கோவில்), வெங்கடேஷ் (திருச்செந்தூர்), அறநிலையத்துறை ஆய்வாளர்கள் செந்தில்நாயகி, முப்பிடாதி, பகவதி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்ட உண்டியல்களில் இருந்து ரூ.1 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரத்து 943 கிடைத்தது. நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், அதன் உப கோவில்களான திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில், குலசேகரன்பட்டினம் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள உண்டியல்கள் எண்ணப்பட்டன. இதில் ரூ.85 லட்சத்து 41 ஆயிரத்து 896 கிடைத்துள்ளது. ஆக மொத்தத்தில் இந்த மாதம் மட்டும் ரூ.2 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 839-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இதேபோல் தங்கம் 1,925 கிராமும், வெள்ளி 51 கிலோ 65 கிராமும், 62 வெளிநாட்டு பணமும் காணிக்கையாக கிடைத்துள்ளது.



Next Story