திருப்பத்தூர் உழவர் சந்தை வளாகத்தில் ரூ1½ கோடியில் உழவர் ஆலோசனை மையம்


திருப்பத்தூர் உழவர் சந்தை வளாகத்தில் ரூ1½ கோடியில் உழவர் ஆலோசனை மையம்
x
தினத்தந்தி 29 April 2022 4:46 PM GMT (Updated: 29 April 2022 4:46 PM GMT)

திருப்பத்தூர் உழவர் சந்தை வளாகத்தில் ரூ.1½ கோடியில் உழவர் ஆலோசணை மையம் கட்டுவதற்கு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் உழவர் சந்தை வளாகத்தில் ரூ.1½ கோடியில் உழவர் ஆலோசணை மையம் கட்டுவதற்கு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டது.

நகராட்சி கூட்டம்

திருப்பத்தூர் நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சபியுல்லா முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் உமா மகேஸ்வரி வரவேற்றார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-

டி.என்டி.கே.சுபாஷ் (தி.மு.க.): தெருவிளக்குகள் பராமரிப்பதற்காக டெண்டர் வைக்கப்பட்டது கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. டெண்டர் பிரிக்கும்போது யாரையும் அழைக்கவில்லை. டெண்டர் பிரித்தபோது உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தரவேண்டும்.
பொறியாளர்: மூன்று மணிவரை டெண்டர் பாக்ஸ் வைக்கப்பட்டு அதில் போடப்பட்ட விண்ணப்பங்களை வைத்துதான் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. 

குட்டி என்கிற சீனிவாசன் (தி.மு.க.): டெண்டரை பிரித்துப் பார்க்கும் போது ஆணையாளர், பொறியாளர், பணி மேற்பார்வையாளர் இருந்தால் போதும். யாரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை.

உழவர் ஆலோசனை மையம்

சங்கீதா வெங்கடேஷ் (தலைவர்): டெண்டரை ரத்து செய்யலாம் என உறுப்பினர்கள் கைகளை தூக்கவேண்டும். அதிகமான ஆதரவு இருந்தால் ரத்து செய்து விடலாம் என்றார். உடனே 3 பேர் மட்டுமே கைகளை தூக்கி டெண்டரை ரத்து செய்ய ஆதரவு தெரிவித்தனர். பெரும்பான்மையான உறுப்பினர்கள் டெண்டரை ஆதரித்ததால் டெண்டரை ஏற்றுக்கொள்ளலாம் என தலைவர் தெரிவித்தார்.

திருப்பத்தூர் -கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள உழவர் சந்தையில் தமிழக அரசு வேளாண்மைத்துறை சார்பில் ரூ1½ கோடி செலவில் உழவர் ஆலோசனை மைய கட்டிடம் கட்ட 7 சென்டு நிலம் வழங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story