தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 April 2022 4:46 PM GMT (Updated: 2022-04-29T22:16:58+05:30)

நாகை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

சாலை சீரமைக்கப்படுமா?
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு கடைதெருவில் உள்ள சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையின் நடுவே ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலையில் பள்ளங்கள் அதிகளவில் இருப்பதால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், குண்டும், குழியுமான சாலையினால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், தலைஞாயிறு.

Next Story