முழு பாதுகாப்புடன் தேேராட்டம்
முழு பாதுகாப்புடன் தேேராட்டம்
அவினாசி,
அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேரோட்டத்தை உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என இணை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
இணை ஆணையர் ஆய்வு
அவினாசியில் கொங்கு 7 சிவாலயங்களில் முதன்மை பெற்ற பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள தமிழகத்தில் உள்ள கோவில்களில் 3-வது பெரிய தேராகும். இந்த கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை தேரோட்ட திருவிழா வருகிற 5-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேேராட்டம் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. கோவில் தேர்த்திருவிழா தொடங்க உள்ள நிலையில் கோவிலில் இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறும்போது “தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரகாரம் சுற்றிவருவதற்கு சிரமமாக இருக்கும். எனவே பிரகாரம் சுற்றிவரும் பாதையில் தேங்காய் நார் மேட் அமைக்க வேண்டும். தேரோட்டம் நடைபெறும் நாட்களில் முழு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவில் வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள பாதிரி மரத்தை பெயர்த்து எடுத்து வேறு இடத்தில் நட்டு வளர்க்க வேண்டும். என்றார்.
தேர் வடக்கயிறு
அப்போது அவினாசிலிங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டதால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அம்பாள் மற்றும் அவினாசியப்பர் கோவில் ராஜகோபுரங்களுக்கு வர்ணம் தீட்டி புதுப்பித்தல், கல்மண்டபங்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்யுமாறு இணை ஆணையர் அறிவுறுத்தினார்.பஞ்சமூர்த்திகள் வழிபாட்டு குழு அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள சண்டிகேசுவரர் தேர் வெள்ளோட்டம் விட இணை ஆணையரிடம் அனுமதி கேட்ட போது துறைரீதியாக முறையாக அனுமதி பெற்று தேர் வெள்ளோட்டம் நடத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
தேர் இழுக்கும் வடக்கயிறு பழுதடைந்துள்ளதால் இந்த ஆண்டு ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் மதிப்பில் 2 புதிய வடக்கயிறுகள் தேரில் இணைக்கப்பட உள்ளதாகவும், தேர்குடில்கட்டைகளும் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும், தேரின் அலங்காரத்துணிகள் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் அடுத்து ஆண்டு தேருக்கு புதிதாக அலங்கார துணிகள் அணிவிக்க இருப்பதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story