விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது


விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
x
தினத்தந்தி 29 April 2022 10:30 PM IST (Updated: 29 April 2022 10:30 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் காணாமல் போன ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2019, 2020, 2021, 2022 ஆகிய 4 ஆண்டுகளில் தொலைந்துபோன 500-க்கும் மேற்பட்ட செல்போன்கள் தொடர்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் செல்போன்களின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


மேலும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் தலைமையில் விழுப்புரம் சைபர்கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி, தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்மணி, கார்த்திக், சைபர்கிரைம் போலீசார் இளங்கோவன், செல்வி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உரியவர்களிடம் ஒப்படைப்பு

இதன் அடிப்படையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டக்குப்பம் ஆகிய உட்கோட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.17 லட்சம் மதிப்புள்ள 79 ஆன்ட்ராய்டு செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. 

இதையடுத்து அந்த செல்போன்களின் உரிமையாளர்களை நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களிடம் செல்போன்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஒப்படைத்தார்.

 மேலும் இதுபற்றி அவர் கூறுகையில், செல்போன்கள் காணாமல் போனால் அதன் உரிமையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலோ அல்லது காவல் உதவி மையம் மற்றும் ஆன்லைனிலும் புகார் தெரிவிக்கலாம். 

அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு அதை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story