வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்


வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 29 April 2022 10:31 PM IST (Updated: 29 April 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

நாகையில், வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

வெளிப்பாளையம்:
நாகையில், வீடுகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
நாகையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது நாகை மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கலைச்செல்வன்(வயது 40) என்பவர் வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. 
போலீசார் சோதனை
இதனைத்தொடர்ந்து அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 20 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், இரண்டு கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நாகை தாமரைக்குளம் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் நித்யா(30) என்பவர் வீட்டில் 1 கிலோ 100 கிராம்  எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. 
ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
இரண்டு பேரின் வீடுகளிலும் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 21 கிலோ 200 கிராம் கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கலைச்செல்வன், நித்யா ஆகிய 2 பேரையும் கைது செய்து வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  கைதான இருவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை வீடுகளில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

Next Story