திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு


திருவெண்ணெய்நல்லூர் அருகே  விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 29 April 2022 10:36 PM IST (Updated: 29 April 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது.


திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி. எடையார் கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் முருகன் (வயது 55). விவசாயி. இவரது மகன் பெங்களூருவில் பழம், காய்கறி கடை வைத்துள்ளார். இந்த நிலையில் முருகன் பெங்களூருக்கு சென்று விட்டார்.

இதனால் இவரது வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

 மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story