பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
அனுப்பர்பாளையம்,
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
பஸ் படிக்கட்டில் பயணம்
திருப்பூரில் இருந்து கோவை கல்லூரிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படிக்க செல்கின்றனர். இதன்படி திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அவினாசி ரோடு வழியாக காலை நேரத்தில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் செல்லும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கின்றனர் என்ற புகார் எழுந்தது.
மேலும் மாணவர்கள் ஆபத்தை உணராமல் இதுபோன்று செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி
இதுதொடர்பாக நேற்றைய ‘தினத்தந்தி’யில் மாணவர்கள் படிக்கட்டில் செல்வதுபோன்ற படங்களுடன் கூடிய விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையில் போலீசார் நேற்று காலை 7.30 மணி முதல் 8 மணி வரை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது தனியார் மற்றும் அரசு பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி வந்த மாணவர்களை போலீசார் எச்சரித்து உள்ளே அனுப்பினார்கள்.
மேலும் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை போலீசார் எச்சரித்தனர்.
Related Tags :
Next Story