விழுப்புரத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 10:47 PM IST (Updated: 29 April 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். 

செயலாளர் சிவமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் துரைபாண்டியன், தமிழக தமிழாசிரியர் கழக மாநில பொருளாளர் கோவிந்தன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பாரி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


ஆசிரியர்களுக்கென்று தனியாக பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும், 

கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் தங்கதுரை, பாலச்சந்திரன், இணை செயலாளர்கள் பரிமேலழகன், ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் ஆனந்த், மகளிரணி செயலாளர்கள் அபிராமி, ஜெரினா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.

Next Story