நாமக்கல்லில் அரசு பஸ் கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு போலீசார் விசாரணை


நாமக்கல்லில் அரசு பஸ் கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 29 April 2022 10:48 PM IST (Updated: 29 April 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் அரசு பஸ் கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு போலீசார் விசாரணை

நாமக்கல்:
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டிற்கு நேற்று மாலை 5 மணியளவில் அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. இதில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் படிக்கட்டில் நின்றவாறு மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியும், கண்டக்டரை பணி செய்யவிடாமல் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த கண்டக்டர் ராஜா நாமக்கல் உழவர் சந்தை அருகே பஸ்சை நிறுத்தினார். இதனால் பஸ்சில் பயணம் செய்த மற்ற பயணிகள் அவதியடைந்தனர்.
தகவலறிந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் மாணவர்கள் மாணிக்கம்பாளையம் அடுத்த கோக்கலையை சேர்ந்த கோகுல் (வயது 21) மற்றும் முகேஷ் பாபு (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இருவரும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருவதும், இந்திய மாணவர் சங்கத்தில் இருப்பதும் தெரியவந்தது.
அதேபோல் பஸ் கண்டக்டர் பயணிகளை மரியாதை குறைவாக நடத்துவதோடு பயணிகளை மிரட்டுவதாக மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகளை, வேறு பஸ்சில் போலீசார் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story