நாமக்கல் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது


நாமக்கல் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 29 April 2022 10:48 PM IST (Updated: 29 April 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஊட்டச்சத்து மையங்கள் என 368 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.
இதில் 210 டாக்டர்கள், 430 செவிலியர்கள், 1,400 ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம் பணிகளில் ஈடுபட உள்ளனர். முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story