காங்கயத்தில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை
காங்கயத்தில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை
காங்கயம்,
காங்கயத்தில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த மழை
காங்கயத்தில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் வாட்டி எடுத்தது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் மழை கொட்டி தீர்த்தது. பின்னர் ஆலங்கட்டி மழையும் பெய்தது.
மழையுடன் சூறாவளி காற்று வேகமாக வீசியதால் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தன. மேலும் காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி சென்றன.
இதேபோல காங்கயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பகல் முழுவதும் கடும் வெயிலால் அவதிப்பட்ட காங்கயம் பகுதி மக்களுக்கு நேற்று பெய்த மழை குளு,குளு சீதோஷ்ண நிலையை உருவாக்கி சற்றே இதமாக குளிர்ந்த காற்று வீசியது. ஆலங்கட்டி மழை பெய்தபோது வீட்டின் கூரைகளில் இருந்து டமார், டமார் என்று சத்தம் வந்தது. இந்த ஆலங்கட்டி மழையை அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.
ஆலங்கட்டி
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆலங்கட்டியை கையில் எடுத்து விளையாடிமகிழ்ந்தனர். சாலையில் நடந்து செல்வோர் மீது ஆலங்கட்டி மழை பெய்தால் அவர்கள் வலி தாங்க முடியாமல் ஒதுக்கு புறத்திற்கு ஓடினர். பின்னர் ஆலங்கட்டி மழை நின்ற பின்னர் புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story