சின்னசேலத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 105 பேருக்கு பணி நியமன ஆணை


சின்னசேலத்தில்  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  105 பேருக்கு பணி நியமன ஆணை
x
தினத்தந்தி 29 April 2022 10:52 PM IST (Updated: 29 April 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 105 பேருக்கு பணி நியமன ஆணை


சின்னசேலம்

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதை ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் அன்புமணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்களிடம் நேர்காணல் நடத்தி 105 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினர். மேலும் இந்த முகாமில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான பதிவு வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள், சுயதொழில் செய்வதற்கான வழிகாட்டுதல்களும் நடைபெற்றன. இதில் வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை உதவியாளர் சரோஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், ஊரக வாழ்வாதார இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊரக வாழ்வாதார இயக்க மேற்பார்வையாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story