நாசிக்கில் வெயிலுக்கு முதியவர் பலி
மராட்டியத்தில் கோடை வெப்பம் கொளுத்தும் நிலையில், நாக்பூரில் முதியவர் வெயிலுக்கு பலியாகி உள்ளார்.
மும்பை,
மராட்டியத்தில் கோடை வெப்பம் கொளுத்தும் நிலையில், நாக்பூரில் முதியவர் வெயிலுக்கு பலியாகி உள்ளார்.
முதியவர் பலி
மும்பை உள்பட மாநிலம் முழுவதும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை மதியம் நாசிக்கில், நாசிக் ரோடு பகுதியை சேர்ந்த மோகன் வர்மா என்ற 68 வயது முதியவர் மகாம்லாபாத் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். இதில் அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அங்கு இருந்தவர்கள் முதியவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதியவர் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். கடும் வெயில் காரணமாக உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
115 டிகிரி வெயில்
மராட்டியத்தில் அதிகபட்சமாக வியாழக்கிழமை சந்திராப்பூரில் 115.52 வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதேபோல அகோலா, வார்தா, நாக்பூர், யவத்மால், அமராவதி, கோண்டியா ஆகிய பகுதிகளில் 110 டிகிரிக்கு அதிகமாகவும், வாசிம், புல்தானா, கட்சிரோலி பகுதியில் 100 டிகிரிக்கு மேலும் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
நாக்பூர், வார்தா, சந்திராப்பூர், யவத்மால், அகோலா ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சிரிக்கை விடுத்து உள்ளது.
Related Tags :
Next Story