247 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடக்கிறது.
வேலூர்
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் (ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை) குறித்தும், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் பற்றியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், சுகாதாரம், தூய்மை பாரத இயக்கம், விவசாயிகள் கடன் அட்டை, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், மகளிர் திட்டம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம சபை கூட்டங்களில் அனைத்து துறை உயர் அலுவலர்கள், பார்வையாளர்களாக கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கிராமசபை கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story